142 ஆண்டுக்கால டெஸ்ட் வரலாற்றில் 11-வது வீரர் படைத்த 'விசித்திர ' சாதனை!
ஆப்கானிஸ்தான் அணியும் அயர்லாந்து அணியும், முதன்முதலாக டெஸ்ட் போட்டியில் களம் கண்டன.
இந்த இரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாட அங்கீகாரம் பெற்ற பிறகு இப்போதுதான் சந்திக்கின்றன. டேராடூனில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த அயர்லாந்து, முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் 11- வது வீரராகக் களம் இறங்கிய அயர்லாந்து வீரர் டிம் முர்டாக், 75 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணிக்காக அதிக ரன் எடுத்தவர் இவர்தான். தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்சில் 314 ரன்கள் எடுத்தது. அதோடு, 142 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து அணி 288 ரன்கள் எடுத்தது. ஆன்ட்ரூ பெல்பிரின் 82 ரன்களும், கெவின் ஓ பிரையன் 56 ரன்களும் அதிகபட்சமாக அடித்தனர். இந்த இன்னிங்ஸிலும் 11-வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய அயர்லாந்து வீரர் டிம் முர்டாக், 27 ரன்கள் அடித்தார். 142 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11-வது வீரராக இறங்கும் எந்த வீரரும் இரு இன்னிங்ஸ்களிலும் 25 ரன்களுக்கு மேல் அடித்ததில்லை. டிம் முர்டக் முதல் இன்னிங்ஸில் 54 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 27 ரன்கள் அடித்து இத்தகைய இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை ருசித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை