திருமண பந்தலில் இணைந்து கொண்ட விழிப்புலனற்றோர்!
பல்லின கலாசாரங்களுக்கும், விநோதமான நிகழ்வுகளுக்கும் பெயர் போன இந்தியாவில் நாளாந்தம் வித்தியாசமான அம்சங்கள் நிகழ்தேறிய வண்ணமே உள்ளன.
உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு இந்தியாவின் பாரம்பரிய கலைநயத்துக்கு பஞ்சமே கிடையாது.
வழமையாக நாங்கள் மாபெரும் திருமண நிகழ்வுகள் பற்றி ஏற்கனவே உலக உலாவில் கவனம் செலுத்தியிருந்தோம். அந்தவகையில், விழிப்புலனற்ற பல திருமண தம்பதிகளுக்கு விசேடமாக மாபெரும் பந்தலில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு இந்தியாவின் வடோதரா நகரில் நேற்றைய தினம் 21 விழிப்புலனற்ற தம்பதிகள் அவர்களின் குல பாரம்பரியங்களுக்கு அமைவாக தமது இணைகளுடன் சேர்ந்து கொண்டனர்.
நன்கொடை நிதியம் ஒன்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அதிகளவான தம்பதிகள் ஹிந்து முறைப்படி சடங்குகளை மேற்கொண்டனர்.
பொருளாதார ரீதியாக பின்தள்ளப்பட்ட மக்கள் சமூகங்களிடையே மாபெரும் பந்தலில் திருமணம் செய்து கொள்ளும் நடைமுறை பிரபலமடைந்துள்ளது.
பெற்றோர்களை இழந்த மணமகன் மற்றும் மணமகள்கள் தங்களின் விருப்பத்திற்கிணக்க துணையை தெரிவு செய்வதற்கு அனுமதிக்கப்படுவதுடன், பொருளாதாரத்தை ஈட்டுவதற்கான வழிவகைகளையும் பெற்றுக் கொள்கின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை