சீமான்! அவன் தமிழ்த்தேசியப் பெண்களின் தாய்.!!

2000 ஆண்டுகளாக அடிமைப்பட்டவர்கள் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பார் அண்ணல் அம்பேத்கர்.

அந்த ஒடுக்கப்பட்டச் சமூகத்தைக் காட்டிலும் ஒடுக்கப்பட்டவர்கள் இந்திய குடும்பக் கட்டமைப்பில் வாழும் பெண்கள்.

பெண்வி டுதலை என்பதை மேட்டுக்குடி வர்க்கச் சொத்தாக மட்டும் வெளிப்படுத்துகிற ஊடகப் பெருவெளியில், அரசியல் பெருவெளியில் நாம் தமிழர் கட்சி அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலையில் வாழக்கூடிய பெண்கள், உழைக்கும் பெண்கள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பும் பெண்களை முன்னிறுத்தி 50 விழுக்காடு பாராளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு கொடுத்துபெருமைப்படுத்தியிருக்கிறது.


“வட்டமேசை மாநாட்டின்போது மகாத்மா காந்தியடிகளிடம் பெண்களின் அரசியல் பங்களிப்பு பற்றி கேள்வி எழுப்பியபோது பெண்கள் ஆண்களுக்கு இணையாக போட்டி போட்டு அரசியல் களத்திற்கு வர வேண்டும்” எனவும், அதேநேரத்தில் “பெண்களுக்குத் தனித்தொகுதி தேவையில்லை” என்றும் கூறினார்.

ஆனால், பத்து ஆண்டுகளாக பெண்களுக்குத் தனித்தொகுதி வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார் அண்ணன் சீமான். 2013ஆம் ஆண்டு வெளியான முன்னணி தமிழ் இதழ்களில் அவரது இந்தக் கருத்து வெளியானது.


இந்தியாவின் தேசப்பிதா காந்தியடிகளே தனித்தொகுதி தேவையில்லை என்றார். ஆனால், அண்ணன் சீமான் அவர்கள் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு 50 : 50 விழுக்காடு கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கிறார்.

கேரளாவின் முன்னணி தொலைக்காட்சி இதனைப் பாராட்டி செய்தி வெளியிட்டது. பொதுவுடைமையாளர் வாசுகி பாராட்டியிருக்கிறார். ஆனால், அதனைக் கொச்சைப்படுத்துகிறது இவரின் பதிவு.

பெண் விடுதலை என்பது ஆண்களைப் போல உடையணிவது, முடிவெட்டிக் கொள்வது அல்ல! உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளுவதும் அல்ல! சமூக விடுதலையே பெண்விடுதலை. முல்லைப்பெரியாறு, காவிரி நதிநீர், கூடங்குளம் அணுமின் நிலையச் சிக்கல், மீனவர் பிரச்சினை என எல்லா விடயங்களிலும் நேரடியாகப் பாதிக்கப்படக்கூடிய முதல் நபர் பெண்.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியில் களம் காணும் பெண் போராளிகள் சமூக விடுதலைதான் பெண் விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும் என உறுதியாக நம்பிக் களத்தில் பயணிக்கிறார்கள். மருத்துவரே! இனிக்கும் வார்த்தைகள் அல்ல சீமானின் வார்த்தைகள்.

நானும் கட்சியில் இணைவதற்கு முன், சீமான் வைகோ மாதிரி ஒரு பொய்கோ ஆகிவிடுவார். சீமான் ஒரு சினிமாக்காரர் + சீமான் ஒரு அரசியல்வாதி. சினிமாக்காரனும் அயோக்கியன், அரசியல்வாதியும் அயோக்கியன்.

அதனால், சீமான் பின்னால் செல்ல வேண்டாம் எனக் கூறினார்கள். எங்கள் குடும்பமே திராவிட இயக்கக் குடும்பம். ஆனால், என் வாழ்க்கையில் முக்கிய முடிவுகள் எடுக்க இடம் கொடுக்கப்படவில்லை,( சமூகசிக்கல்  காரணமாக}, வாயைக் குறைத்துப் பேசு என்பார்கள்.

என் புகுந்த வீட்டில் பக்கத்துத் தெருவுக்குச் செல்வதற்குக்கூட பாதுகாப்பாய் நடக்க இயலாதப் பாட்டியை என்னுடன் அனுப்பி வைப்பார்கள். நான் ஒரு பெண்ணாக மருத்துவத்துறையிலும், பொதுவெளியிலும் சந்தித்த ஒடுக்குமுறைகள் ஏராளம். ஆனால், அண்ணன் சீமான் எந்தவொரு தடையும் இல்லாமல் எங்களை அரசியல் களத்தில் ஈடுபடுத்தி சமூகத்திற்கு அடையாளம் காட்டியவர்.

எனக்கும், அண்ணனுக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு. ஆனால், முரண் கருத்துகளுக்குக்கூடத் தாயைப் போலப் பதிலளிப்பவர் எங்கள் அண்ணன்.

கண் கலங்கினால்கூட அழுகை கோழைகளின் ஆயுதம்; தைரியமாகப் பயணி என்பது அவரின் அறிவுரை.  நாம் ஒரு நாட்டையே, தேசத்தையே கட்டப்போகிறோம். இதெல்லாம் ஒரு பிரச்சினையா? என்று ஊக்கம் அளிப்பார்.

இது சீமானைப் பற்றிய துதி அல்ல. எங்கள் அண்ணனின் பண்புகளைப் பற்றிப் பேச வேண்டுமானால் சில மணிதுளிகள் அல்ல பலகாலம் வேண்டும். சீமானின் உரிமைக்குரல் உங்களுக்கு வேண்டுமானால் இனிப்புப் பேச்சாகத் தெரியலாம்.


உங்களின் தலைவர்கள் இந்திராவின் இனிப்புப்பேச்சிற்கும், சோனியாவின் இனிப்புப்பேச்சிற்கும்தான் தமிழர்களின் கல்வி உரிமையை, கச்சத்தீவு உரிமையை, ஈழதமிழர்க ளைப் பலி கொடுத்திருக்கலாம். இனிப்புப்பேச்சு பேசுபவனல்ல சீமான்! அவன் தமிழ்த்தேசியப் பெண்களின் தாய்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.