ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் குற்றவியல் டிப்ளோமா வழங்கும் வைபவம்!!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான கற்கை பீடத்தின் சமூகவியல் டிப்ளோமா பாடநெறியையும் குற்றவியல் டிப்ளோமா பாடநெறியையும் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் (19) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 166 மாணவர்களுக்கு இன்று டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு, அதனை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அவர்கள் 06 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான கற்கை பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஜி.பி.எம்.சந்ரகுமார, பேராசிரியர் மயூர சமரகோன், பேராசிரியர் டப்ளியு.எஸ்.விஜயகோன், பேராசிரியர் பிரனித் அபேசுந்தர உள்ளிட்ட பேராசிரியர்கள், கலாநிதிகள் உள்ளிட்ட கல்விமான்கள் பலர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
கருத்துகள் இல்லை