நாய்களால் ஏற்படுகின்ற இன்னல்களைத் தீர்க்க அரசியல் மேதாவிகளின் தொல்லையும்!

காலம் அறிந்து தேவையறிந்து செயற்பட நினைக்கும் போது அதை நிறுத்தவும் பலர் முனைகின்றனர்

இன்று யாழ்.பல்கலைகழகப் பகுதியில் கட்டாகாலி நாய்களுக்கான கருத்தடைச் செயற்பாடு இடம்பெற்றது. கருத்தடை செய்யப்பட்ட நாய்கள் எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் உடனடியாகவே தெருக்களில் விடப்பட்டன. அதன் காரணமாக அவ் நாய்கள் மயக்கமான நிலைக்குச் சென்றுள்ளதுடன் பல இன்னல்களை அனுபவித்துள்ன.

உண்மையில் கருத்தடை செய்யப்பட்ட நாய்கள் குறைந்தது மூன்று நாட்கள் தனிதனி கூட்டில் வைக்கப்பட்டு அவற்றுக்குரிய சாப்பாட்டுடன் மருத்துவரின் உதவியுடன் பாராமரிக்கப்பட்டே மீண்டும் வீதிகளில் விடப்படவேண்டும். இதுவே நியதி  ஆனால் அதற்குரிய பராமரிப்பு நிலையம் காணப்படாத காரணத்தினால் தான் நாய்கள் கருத்தடை செய்யப்பட்டவுடன் அவை தெருக்களில் விடப்படுகின்றன.

நாய்களுக்கு ஏற்படுகின்ற இவ் இன்னல்களைத் தீர்க்கும் பொருட்டும் நாய்களால் மக்கக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் நோக்குடனும் தான் தியாகி அறக்கொடை நிறுவனத்தால் நாய்களுக்கான கருத்தடை மற்றும் மருத்துவ பாராமரிப்பு நிலையமும் நாய்கள் காப்பகமும் பல மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டதும் அது செயற்பாடுக்கு வரும் தினத்திற்கு சில தினங்களுக்கு முன் அரசியல் காழ்புணர்ச்சிகளால் மக்களுக்கு தவறாக தகவல்களினை வழங்கி அவர்களை தவறாக வழி நடத்தி அரசியல் மேதாவிகளினால் நிறுத்தப்பட்டத்தையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்;ட விரும்புகின்றோம்.

-பார்த்தீபன்-
தமிழ் தேசிய மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.