திடீரென வானில் தோன்றிய துவாரம்... வேற்று கிரகத்திற்குச் செல்லும் வாசலா?

ஐக்கிய அரபு நாடுகளில் அல் அன் நகரில் துவாரம் போன்ற வடிவில் ஒன்று வானில் திங்கள் கிழமை அன்று தோன்றியுள்ளது.
சில மணிநேரம் வானத்திலிருந்த அது அங்கிருந்த மக்கள் பலரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எப்படி இது அங்குத் தோன்றியது, திரைப்படங்களில் காட்டுவது போல இது வேற்றுகிரகத்திற்குச் செல்லும் வாசலா அல்லது விண்தட்டா எனப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது சார்ஜா, மாஹ்தா, புராமி, ஓமன் உள்ளிட்ட பகுதிகளிலும் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.
இதை இப்ராஹிம் அல் ஜர்வான் என்னும் வானிலை மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர் படமெடுத்து ``இந்த அபூர்வமான நிகழ்வு இன்று காலை அல் அன் நகரில் ஏற்பட்டது" என்று ட்விட்டரில் பகிர இப்போது இதைப் பலரும் ஷேர் செய்துவருகின்றனர். ட்விட்டர்வாசிகள் சிலர் இதை `Whirlpool hole' எனக் குறிப்பிடுகின்றனர். சிலர் அவெஞ்சர்ஸ் படத்தின் இறுதி யுத்தத்தில் வரும் துவாரம் போல இருக்கிறது, இது கண்டிப்பாக வேற்று கிரகவாசிகளின் வேலைதான் என்றனர். இது கடவுள் பூமிக்கு வருவதைக் குறிக்கிறது என்றும் கூறினர்.
ஆனால், இது குறித்து விளக்கமளித்த அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் இது `fallstreak hole' என்னும் இயற்கை நிகழ்வுதான் என்று குறிப்பிட்டனர். மேகங்களில் இருக்கும் நீரின் வெப்பநிலை உறையும் வெப்பத்தைவிட குறைவாக இருந்து அங்கே `ice nucleation' என்பதே நிகழாமல் இருக்கையில், இந்த `fallstreak hole' உருவாகுகின்றன. மிக அபூர்வமாக இது சில நேரங்களில் 50 Km பரப்பளவுகூட கொண்டிருக்கும் என்கிறார்கள். பல நேரங்களில் இவை வேற்று கிரக விண் தட்டுகள் எனத் தவறாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதுதான் இப்போதும் நடந்திருக்கிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.