தீவிர தேடுதல் வேட்டை.. கொன்று குவிக்கப்பட்ட 3,7,71 பயங்கரவாதிகள்!

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய அமைப்பின் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல் சமீபகாலமாக தலைதூக்க தொடங்கியுள்ளது.
அந்நாட்டின் ராணுவம் மற்றும் காவல் துறையினருக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில், பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, வடக்கு மற்றும் வடகிழக்கு ஆப்கானிஸ்தானுக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 3,7,71 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட தகவலை ராணுவத்தின் '209 ஷஹீன்' படையை சேர்ந்த துணை தளபதி ஆதம் கான் மட்டின் இன்று வெளியிட்டார்.
'வாலித் 97' என்ற பெயரில் நடைபெற்ற இந்த பயங்கரவாத ஒழிப்பு தாக்குதலில், 3,771 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் 64 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.