மீண்டும் இணையும் காதல் ஜோடி!

ஆர்யா - சாயிஷா திருமணம் சமீபத்தில் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் இருவரும் இணைந்து நடித்த கஜினிகாந்த் திரைப்படத்தின்போது இருவருக்குமுள்ள நட்பு காதலாக மலர்ந்தது. சூர்யா நடிக்கும் காப்பான் படத்திலும் இருவரும் நடித்துவருகின்றனர். கே.வி.ஆனந்த் இயக்கும் அப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்க ஆர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். ‘டெடி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கரடி ஒன்றும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கே.ஈ.ஞானவேல்ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க சாயிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. டி.இமான் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களி வெளிவந்துள்ளன.

No comments

Powered by Blogger.