வடமாகாண ஆளுனராக உங்களை நான் சந்திக்க வேண்டிய அவசியமில்லை!!

ஐநா மனிதவுரிமைச் சபை கட்டடத்தில் கஜேந்திரகுமாரும் சுரேன் இராகவனும் சந்தித்துக்கொண்டார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது பற்றி சில ஊகங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் உண்மையில் என்ன பேசினார்கள்.
பரஸ்பரம் வணக்கம் சொன்னதன் பின்பு. சுரேன் கஜேந்திரகுமாரைப் பார்த்துக் கேட்டார் நான் ஆளுனராகப் பதவியேற்ற பின்னர் உங்களை யாழ்ப்பாணத்தில் சந்திக்க வேண்டி அழைப்பு விடுத்தேன் அதனை நீங்கள் மறுத்துவிட்டீர்கள் ஏன்? நான் பலரையும் சந்தித்தேன் ஆனால் நீங்கள் ஒருவர்தான் சந்திக்க மறுக்கிறீர்கள்.
அதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார், தனிப்பட்ட முறையில் உங்களைச் சந்திப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் வடமாகாண ஆளுனராக உங்களை நான் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. ஒன்று. நான் மாகாண சபையின் அரசியற் தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் ஆளுனருக்கு அதிக அதிகாரம் வழங்குவதனையும் நான் ஏற்றுக்கொள்வில்லை. இந்நிலையில் உங்களைச் சந்தித்து உங்களது பதவிக்கு மதிப்பளிக்க நான் தயாராகவில்லை. என்றார்.
எதிர்காலத்தில் எங்களுடைய கட்சி மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு அங்கத்தவர்களைக் கொண்டிருந்தால், அப்போது சிலசமயம் ஆளுனரை நான் சந்திக்க நேரிடலாம். ஆனால் இப்போது எந்த அவசியமும் இல்லை.
எனக்குறிப்பிட்டார்.
அருகிலிருந்து அவதானித்த ஊடகவியலாளர் வழங்கிய தகவல்.
நன்றி 
உமேஸ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.