5 மாதக் குழந்தையுடன் வந்த பெண் எம்.பி-யை வெளியேற்றிய சபாநாயகர்! - குவியும் கண்டனக் குரல்கள்

என் மகள் இந்த இடத்துக்கு தேவையற்றவள் (unwanted)' என்று கூறி எங்கள் இருவரையும் வெளியேற்றிவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

குழந்தை பெற்ற தாய்மார்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புகையில், பல சிரமங்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். கைக்குழந்தையையும் கவனிக்க முடியாமல்,  வேலையிலும் கவனம் செலுத்தமுடியாமல் அவர்கள் படும் சிரமங்கள் ஏராளம். இதற்கு, தேர்தலில் வெற்றிபெற்று மக்கள் பிரதிநிதிகளாக பேரவைக்குச் செல்லும்  அரசியல்வாதிகளும் விதிவிலக்கு இல்லை. தன் கைக்குழந்தையை ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்துக்கே எடுத்துச்சென்ற நியூஸிலாந்து பிரதமர் ஜசிண்டா  அர்டெர்ன் பலரையும் புருவம் உயர்த்தவைத்தார்.


இதேபோன்று ஒரு சம்பவம் டென்மார்க் நாட்டில் நடைபெற்றுள்ளது. ஆனால் அந்த சம்பவம், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. டென்மார்க்  நாடாளுமன்ற உறுப்பினர் மெட்டி அபில்கார்டு என்ற 30 வயது பெண், நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு 5 மாத பெண் குழந்தையை அழைத்துவந்திருக்கிறார். அவையின் தலைவரான சபாநாயகர், குழந்தையுடன் வந்தவரை அவையில் இருந்து வெளியேற்றிவிட்டார்.

இதுதொடர்பாக மெட்டி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், "வழக்கமாக நான் என் குழந்தையை அவைக்குக் கொண்டு செல்வதில்லை. ஆனால், அன்றைய தினம்  பேரவையில் முக்கியமான வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் என் வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நான் செல்லவேண்டிய  கட்டாயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், என் கணவராலும் அங்கு வந்து குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் குழந்தையுடன் அவைக்குச்  செல்லவேண்டியதாயிற்று.

ஆனால், நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகரான பியா கஜாயிர்ஸ்கார்டு, 'என் மகள் இந்த இடத்துக்கு தேவையற்றவள் (unwanted)' என்று கூறி, எங்கள் இருவரையும் வெளியேற்றிவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

சபாநாயகரின் இந்தச் செயல், கட்சி பேதமின்றி பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்டனத்தைப் பெற்றுள்ளது. மேலும், சபாநாயகர் தனது செயலுக்கு  மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சபாநாயகர் பியா,"குழந்தையை நாடாளுமன்ற அவைக்குக் கொண்டுவருவது நல்லதல்ல' என்று மெட்டியிடம்  தெரிவிக்கும்படி உதவியாளர் ஒருவரிடம் மிகவும் கண்ணியமான முறையில்தான் சொல்லியனுப்பினேன்" என்று தெரிவித்துள்ளார். 'இத்தனை பேர் பிரச்னை  செய்யும் அளவுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை' என்றும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.