கிளிநொச்சியில் புதிதாக கண் சத்திரசிகிச்சை நிலையம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கண் சத்திரசிகிச்சை ஆரம்பிக்கப்பட உள்ளது.


கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கண்காணிப்பில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் குறித்த சத்திரசிகிச்சை ஆரம்பிக்கப்பட உள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.

குறித்த நிகழ்வு நாளை காலை 8.30 மணியளவில வைத்தியர் த.காண்டீபன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வில் கண் சத்திரசிகிச்சை விடுதி திறந்து வைக்கப்படவுள்ளதுடன், கண் சத்திரசிகிச்சையும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதுவரை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கண் சத்திரசிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டியிருந்தது.

ஆனால், இனிவரும் காலங்களில் கிளிநொச்சி மக்களுக்கு அந்த அசௌகரியம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.