இந்தியா ஈழம் போன்ற நாடுகளில் ஊடக அந்தப் புரம்!!

சனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்வார்கள் ஊடகங்களை அது வெறும் சொல்லே தவிர உலகின் சக்தி மிக்க முதாலாளி அரசியல் நடைபெறும் இடங்களின் எடுபடுவதில்லை

அங்கே ஒரு தூய்மை வாதம் இருப்பதில்லை
குறிப்பாக இந்தியா ஈழம் போன்ற நாடுகளில் அரசியல் வாதிகளின் அந்தப் புரங்களில் குளிர்காயும் நிலையிலேயே ஊடகங்கள் காணப் படுகின்றன

ஒரு சில ஊடகங்கள் நடு நிலைமையாகச் செயற்பட்டால் அது தொடர்பான ஊடக வியலாளர் கொல்லப்படல் காணாமல் ஆக்கப்படல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது ஈழத்தில் கூட நிமலராஜன் படுகொலை என்பது அந்தப் புர ஊடகத்தைச் செய்யாததுதான்

இந்தியா மட்டுமென்ன இதில் விதிவிலக்கா? எழுவர் விடுதலை தொடர்பாக அற்புதம்மாளுக்காக மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நிகழ்த்தப் பட்டது முகிலன் பற்றியும் பேசப்பட்டது

பொள்ளாச்சிச் சம்பவத்தை ஊதிப் பெருப்பித்து தக்க தருணத்தில் அற்புதம்மாளையும் முகிலனையும் காணாமலே செய்து விட்டன அந்தப் புர ஊடகங்கள்

அப்படி என்றால் பொள்ளாச்சிப் பிரச்சினையைப் பேசக் கூடாதா என யாரும் நினைக்கக் கூடும் நிச்சயம் பேச வேண்டும் ஆனால் அற்புதம்மாளையும் முகிலனையும் பேசாமல் போனது ஏன்?

அடுத்து பொள்ளாச்சிச் சம்பவம் காவல் நிலையத்தில் முறையிட்டு பல நாட்களின் பின் வெளிச்சத்துக்கு வந்தது ஏன்?

இதற்குள் ஊடக அந்தப்புர அரசியல் ஒன்று உள்ளது அல்லவா

எல்லோரும் உலகில் கிட்லரை சர்வாதிகாரி என்பார்கள் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் கிட்லரின் சர்வாதிகாரத்தின் பின்னணியில் அவரின் பின்னால் நாஜிப் படைகளைத் திரளச் செய்த ஊடகப் பேச்சாளர் யார் என்றால் பலருக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை  உண்மையில் கிட்லரை சக்திமிக்கவராக வைத்திருந்தவர் அவரே அந்த ஊடகக் காரனே ஆனால் வரலாற்றில் அவர் பெயர் வராமலே போயின

இப்படித்தான் மக்கள் மனங்களைபிழையான வழிகளில் திசைதிருப்பும் செயற்பாட்டை ஊடக அந்தப்புரம் சிறப்பாகச் செய்ய
மனுதர்ம நீதிப் போராட்டங்கள் நகைச்சுவைப் போராட்டங்களாக கேலி செய்யப்பட்டு மறைந்து விடுகின்றன

ஆனாலும் இறுதியில் தர்மமே வெல்லும் அப்பாவி மக்களின் அழுகுரலே வெல்லும் முதலாளி அரசியலின் வங்கிசம் அடியோடு அழியும்

ஏனெனில் முசோலினியின் இறுதியும்
 மகிந்த நண்பன் கடாபியின் முடிவும் அவ்வாறுதான் இருந்தது

அது அப்படியே இருக்க நாங்கள் தோற்ற இனம் எங்களால் இனி எதுவுமே செய்ய இயலாது சரி இப்பிடிப் போற வழி பிழை என்றால் எப்பிடிப் போறது என்று சொல்லுங்கோ என தமிழ் மக்களை நோக்கி கோமாளித்தனமான கேள்விகளை வீசுவதும் தோற்ற இனம் இனி எதுவுமே செய்யமுடியாது என எதிர்மறை மனநிலை கட்டியெழுப்பப் படுவதையும் அரசியல் வாதிகளும் அவர்தம் ஊடகங்களும் தந்திரமாகச் செய்து வருகின்றன

யெனீபாவில் கூட இந்திய அமெரிக்க நச்சு வட்டத்துள் தமிழர் பிரச்சினை கபடி ஆடப்படுகிறது

அப்ப என்னதான் வழி இங்கேதான் மையவாதச் சிந்தனை ஒன்று தேவைப் பபடுகிறது முதலில் எதிர்மறைக் கருத்தியலை உடைக்க வேண்டும் நம்பிக்கையுடன் தமிழுக்காய் வாழ வேண்டும்

ஏனெனில் அமெரிக்க ஏகாதி பத்தியத்தை கியூபா என்ற குட்டி தேசத்தால் எதிர்த்து நிற்க எப்படி முடிந்தது

கற்களால் உண்டான பாறையின் வலிமையைவிட
கருத்துக்களால் உண்டாகும் வலிமை சக்தி மிக்கது என்ற பிடல் காஸ்ரோவின் தத்துவார்த்த கருத்தியலும் ஆட்சியாலுமே ஆகும்

அதனை நன்கு விழங்கி தமிழ்நாட்டுத் தமிழரும் ஈழத்தமிழரும் ஊடக அந்தப் புரங்களை அழித்தொழிக்க வேண்டும்

சரியான கருத்தியல்களை சரியான நேரத்தில் முன்வைக்க வேண்டும் அதுவே தற்போதைய உசிதம்.

-த.செல்வா-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.