காத்தான்குடியில் ஹெரோயின் விற்பனை கும்பல் சிக்கியது!!
மட்டக்களப்பு மாவட்ட விசேட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி 10 ஆம் குறிச்சியில் உள்ள வீடு ஒன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் இவர்களில் இருவர் போதைப் பொருள் வியாபாரிகள் எனவும் நான்கு பேர் போதைப் பொருள் பாவனையாளர்கள் எனவும் மட்டக்களப்பு மாவட்ட விசேட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சுமார் 3 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களும் போதைப் பொருளும் சட்ட நடவடிக்கைகளுக்காக காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை