அதிமுக ஆட்சியில்தான் அதிகளவில் பெண்களுக்கான நலத் திட்டங்கள்!!

அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் பெண்கள் நலனுக்கான திட்டங்கள் அதிகளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டிருக்கும் அதிமுகவின் உயிர்நாடி தாய்மார்கள்தான் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பெண் இனத்தின் உயர்வுக்காக பெருமளவில் திட்டங்களை வகுத்து அவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளனர். அதிமுக ஆட்சியில்தான் பெண்கள் நலனுக்கான திட்டங்கள் அதிகளவில் நிறைவேற்றப்பட்டன. தொட்டில் குழந்தைத் திட்டம், மகப்பேறுகால ஊக்கத் தொகை, பேருந்து பயணங்களின்போது தாய்மார்கள் பாலூட்ட தனி அறைகள், பிறந்த குழந்தைக்கு 16 வகைப் பொருள்கள் கொண்ட பரிசுப் பெட்டகம் என பெண்ணினத்தை கண்ணாக காத்து வருகிறது அதிமுக அரசு. கட்சியின் இளம் பெண்கள் பாசறையில் பங்கேற்றுள்ள மகளிர் அணியினர், தற்போதைய தமிழக அரசு, பெண்களுக்கு ஆற்றி வரும் நற்பணிகளை பொது மக்களிடையே எடுத்துரைக்க வேண்டும். இது தமிழகமே தனக்கு வேலி என்னும் தவத்தால் வாழ்ந்திட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.
மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெற மகளிர் அணியினர் பாடுபட வேண்டும். அதற்கான களப்பணிகளில் அதிமுக மகளிர் அணியினர் உடனடியாக களமிறங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.