நியூஸிலாந்து பிரதமருக்கு கொலை மிரட்டல்!!

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கு சமூக வலைதளத்தின் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நியூசிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு தாக்குதலானது அந்நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

துயரமான சம்பவத்திலிருந்து பொதுமக்களை மீட்கும் விதமாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் போர்க்கால நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சம்பவம் நிகழ்ந்த மறுதினமே பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஜெசிந்தாவிற்கு எதிராக இணையத்தில் ஒரு சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
அதில் ஒரு ட்விட்டர் கணக்கில், துப்பாக்கியுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டு, “அடுத்தது நீதான்” என நியூசிலாந்து பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனை பார்த்த பொதுமக்கள் பலரும் பொலிஸார் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அந்த கணக்கை இடைநிறுத்தம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து செய்திவெளியிட்டுள்ள NZ Herald ஊடகம், முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களையும் தீவிர வலதுசாரி கருத்துக்களையும் வெள்ளையின வெறிபிடித்த வசனங்களும் அந்த ட்விட்டர் கணக்கில் அடுத்தடுத்து இடம்பெற்றன.

சுமார் இரண்டு நாட்களாக இந்த அச்சுறுத்தல் அந்த கணக்கில் காணப்பட்டதாகவும், பொதுமக்கள் பலரும் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, கணக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.