ஜெனிவாவில் ஆளுநர் வெளியீட்ட நம்பிக்கை என்ன??


காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பான தக­வல்­களை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன விரை­வில் வெளி­யி­டு­வார் என்று வடக்கு ஆளு­நர் சுரேன் ராக­வன் நம்­பிக்கை வெளி­யிட்­டுள்­ளார். ஜெனி­வா­வில் வைத்து செய்­திச் சேவைக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். ‘காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விட­யம் மனி­தா­பி­மான நாகரிக பிரச்­சினை. இதி­லி­ருந்து ஒரு­போ­தும் நகர்ந்து செல்ல முடி­யாது என்று அரச தலை­வ­ருக்­குத் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­றேன். காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரது உற­வு­க­ளின் தேவை­க­ளுக்கு செவி­ம­டுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும். ஐந்து மாவட்­டங்­க­ளி­லும் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கங்­களை நிறு­வு­வது அவ­சி­ய­மா­கும்’ என்­றார் ஆளு­நர் கலா­நிதி சுரேன் ராக­வன்.
Powered by Blogger.