அல்லைப்பிட்டி வாகன விபத்தில் நபர் ஒருவர் பலி!
அல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற டிப்பர், மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த 21 வயதான நிதர்ஷன் என்பவரே உயிரிழந்தார்.
மோட்டாா் சைக்கிளில் வந்த இளம் குடும்பத்தலைவர், டிப்பா் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றது என்றும் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை