சுரேன் ராகவனிடம் எம்।கே।சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் நீதி வேண்டி மனு!


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவா வில் கடந்தமாதம் ஆரம்பமாகியுள்ளதுடன் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், அர சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமய தலைவர்கள் ஆகியோர் ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் வட மாகாணம் சார்ந்து முன்வைக்க வேண்டியதென கருதும் தமது கோரிக்கைகளை   ஆளுநருக்கு எழுத்துமூலம் சமர்ப்பிக்கலாமென ஆளுநர் அறிவித்துள்ளார்.  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இதனை மறுதலித்து வரும் வேளையில்  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் ஜெனிவாவில் சமர்ப்பிக்க வேண்டியதென கருதும் தமது கோரிக்கைகளை  ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தனர். இதனால் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின்ட உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர். எமது மக்கள் போராட்டத்தை கொச்சை படுத்தி வரும் மைத்திரியின் எடுபிடி சுரேன் ராகவனிடம் எம்।கே।சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் நீதி வேண்டி மனு அளிப்பது வேதனையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.