இராஜாங்க அமைச்சர் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்!!


வில்பத்து பகுதிக்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும இன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (24) திடீர் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இன்று அங்கு சென்ற இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளார். இதன் போது கொழும்பில் இருந்து வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் வருகை தந்ததோடு, முசலி வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து மேலும் விடுவிப்பு செய்யப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மரிச்சிக்கட்டி,பாலைக்குழி, கரடிக்குழி உள்ளிட்ட இடங்களையும் நேரடியாக சென்று பார்வையிட்டார். மேலும் கல்லாறு அமைச்சுக்குளம் பகுதியில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் பேட்டைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து விளாத்திக்குளம் பகுதியில் வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட இடத்தையும் நேரடியாக சென்று இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார். இதன் போது ஏற்கனவே விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளமையினையும் இராஜாங்க அமைச்சர் அவதானித்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.