ஒன்ராறியோ மாகாணத்திற்க்கு நீண்ட கால பராமரிப்பு திட்டங்கள் அறிவிப்பு!


வைத்தியசாலைகளுக்கான புதிய நீண்ட கால பராமரிப்பு திட்டங்களை ஒன்ராறியோ மாகாண சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முதற்கட்டமாக மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு 1,157 நீண்ட கால பராமரிப்பு படுக்கைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படுக்கைகள் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என துணை முதல்வர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்துள்ளார். முற்போக்கு கன்சர்வேடிவ் அரசாங்கம் ஐந்து ஆண்டுகளில் 15,000 நீண்ட கால பராமரிப்பு படுக்கைகளை வழங்குவதாக உறுதியளித்தது. இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) 7,232 நீண்ட கால பராமரிப்பு படுக்கைகளை கொண்டுவரவுள்ளதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.