அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பெறுமதி என்ன தெரியுமா??


அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக பல்வேறுப்பட்ட சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில்,
அதற்கான அடிக்கல், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.


 பாரிய நிதி முதலீட்டுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்காக ஓமான் வழங்கியுள்ள நிதி முதலீடு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 அதன்படி 3.8 பில்லியன் டொலர் (சுமார் 72 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்) செலவில் இந்த பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிறந்த தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அதற்கான அடிக்கல்லை அவர் நாட்டி வைத்தார்.

 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஏற்றுமதி பொருளாதார இலக்காகக்கொண்ட செயற்திட்டத்தின் கீழ் அம்பாந்தோட்டையில் பாரிய முதலீடு திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 இதன் கீழ் Sliver park petroleum Private limited தனியார் நிறுவனத்தின் பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் lanwa Sanstha cement Corporation Private limited தனியார் நிறுவனத்தின் சீமெந்து தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமே இன்று இடம்பெற்றது. அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் பிரதமரின் செயற்திட்டத்தின் கீழ், அமைச்சர் சஜித் பிரேமதாச முன்மொழிவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வு.
Powered by Blogger.