சுமந்திரன் அங்கிள்!எப்போது எங்கள் அப்பாவை கண்டு பிடித்து தருவீர்கள்?

கொஞ்சம் பொறு அம்மா. இப்போதுதானே இரண்டு வருட அவகாசம் பெற்று கொடுத்திருக்கிறோம்

இரண்டு வருடத்தில் கண்டு பிடித்துவிடுவார்களா அங்கிள்!

அப்படியில்லை அம்மா. அப்புறமும் இரண்டு வருடம் அவகாசம் பெற்று கொடுப்போம் அல்லவா.?

சரி. அப்ப எப்பதான் எங்கள் அப்பாவை கண்டு பிடித்து தருவீர்கள்?

கண்டு பிடிப்பதற்காக அவகாசம் பெற்று கொடுக்கவில்லை யம்மா. நீங்கள் உங்கள் அப்பாவை மறப்பதற்காகதானே அவகாசம் பெறுகிறோம்.

அப்போ நீங்கள் கண்டுபிடிக்க அவகாசம் பெறவில்லை. நாங்கள் மறப்பதற்காகத்தான் அவகாசம் பெறுகிறீர்கள். அப்படிதானே?

கரெக்ட். நீ கெட்டிக்காரி யம்மா. சீக்கிரம் அப்பாவை மறந்திடும்மா!
-பாலா-
24.03.2019

No comments

Powered by Blogger.