யாழ் விலகாமல் பெரிய விமானம் கிராமத்தில் மாபெரும் நன்னீர் உறிஞ்சலுக்கான போராட்டம்!(படங்கள்)


யாழ்.வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பெரிய விளான் கிராமத்தில் இருந்து நீர் விநியோகத்திற்கு என தினமும் அதிகளவான நன்னீர் உறிஞ்சி எடுக்கப்படுவதனை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரியவிளான் சந்தியில் இன்று காலை 8 மணி முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், எமது கிராமத்தில் இருந்து காரைநகர் பிரதேசத்திற்கு என தினமும் அதிகளவான நன்னீர் உறிஞ்சி கொண்டு செல்லப்படுகின்றது.

இதனால் எமது நன்னீர் உவநீராக மாறி வருகின்றது.எமது கிராமத்து நன்னீர் எமது கிராமத்திற்கே போதுமானதாக இல்லாத நிலையில் இங்கிருந்து நன்னீர் அதிகளவில் உறிஞ்சு எடுத்து செல்லப்படுகின்றது. இது தொடர்பில் உரிய தரப்புக்களும் நாம் தெரிய படுத்தியும் எந்த பயனும் இல்லை


இந்நிலையில் வலி,. தென்மேற்கு பிரதேச சபையில் பெரியவிளானில் இருந்து நன்னீர் எடுக்கப்படுவதனை தடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலும் தினமும் நன்னீர் இங்கிருந்து கொண்டு செல்லப்படுகின்றது.


அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டத்தை முன்னெடுத்தோம் என தெரிவித்தனர்.
Powered by Blogger.