இலங்கையில் நடந்தது மனிதஉரிமை சம்மந்தப்பட்ட விடையம் அல்ல இன அழிப்பு நடந்துள்ளது!

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் காணாமல் போனோர்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அமைப்பின் தலைவர் பாதிரியார் சக்திவேல் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது என்பதுதான் தமிழ் மக்களின் எதிர்பாப்பு அரசாங்கம் கிடைத்த கால அவகாசத்தில் செய்தது ஒன்றும் இல்லை எதுவும் செய்யப்போறது என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லாத நிலையில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்பதை நாங்கள் நீண்டகாலமாக சொல்லிவந்துள்ளோம். ஆனால் இரண்டுஆண்டுகள் கால எல்லை கொடுக்கப்பட்டுள்ளது என்பது தமிழ் மக்களை பொறுத்தமட்டில் பெரும் ஏமாற்றம் இந்த ஏமாற்றத்தினை சர்வதேசம் திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ளது. இன்று சர்வதேசத்திற்கு தேவை என்னெவென்றால் தற்போது உள்ள ரணில் அரசினை பாதுகாக்கவேண்டிய தேவை உள்ளது படையினரை எந்த ஒரு நீதிமன்றத்திலும் நிறுத்த மாட்டோம் என்பதை அரசு தெளிவாக சொல்லி நிக்கின்றது தமிழ்மக்களுக்கான அரசியல் நீதி என்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த போர்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டால் மட்டும்தான் நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு. இலங்கை அரசாங்கம் கலப்பு நீதிமன்றத்தினையும் கலப்பு விசாரணையினையினையும் எதிக்கின்றார்கள் அதற்கு அனுமதி கொடுத்துள்ளது சர்வதேசம் ஆனால் உள்ளக விசாணை போதும் என்று அரசு சொல்கின்றது இந்த உள்ளக விசாரணையில் எங்களுக்கு எந்தவித நம்பிக்கையும் கிடையாது. இந்த விடையத்தில் சர்வதேசம் இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொண்டது என்பது சர்வதேசரீதியாக இனஅழிப்பு நடைபெற்ற ஒரு நாட்டிற்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு அநீதி என்றுதான் சொல்லமுடியும். இலங்கையில் நடந்தது மனிதஉரிமை சம்மந்தப்பட்ட விடையம் அல்ல இன அழிப்பு நடந்துள்ளது இன அழிப்பிற்கான நீதி என்பது மனிதஉரிமை சம்மந்தப்பட்ட விடையமாக பார்க்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும் இங்கு நடந்தது போர்க்குற்றங்கள் என்றரீதியில் கொண்டுபோகப்படவேண்டியது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றால் மட்டுமே நீதிகிடைக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தமிழ்மக்களுக்கு எதிரானது தமிழ்மக்களின் அரசியில் நீதிக்கு எதிரானது தமிழ்மக்களின் எதிர்பார்ப்பு திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.