மகளின் சுட்டிப்பேச்சில் உருகும் டோனி!!

தோனி

மகேந்திர சிங் தோனியின் செல்ல மகள் ஸிவா. தோனியைப் போன்றே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் ஸிவாவுக்கும் உண்டு. அவர் செய்யும் சின்னச்சின்ன சேட்டைகள், கொஞ்சல்கள் என எல்லாவற்றையும் சமூக வலைதளத்தில் பதிவிடுவதுதான் தோனியின் மனைவி சாக்‌ஷிக்கு பொழுதுபோக்கு. கிரிக்கெட் என்று வந்துவிட்டால் தோனி எல்லாவற்றையும் மறந்துவிடுவார் என எல்லோரும் கூறுவார்கள். ஆனால், தோனிக்கு தன் செல்ல மகள் ஸிவா தான் உலகம். இரண்டாண்டுகள் தடைக்குப் பின்னர், மீண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஆண்டு தோனி தலைமையில் களமிறங்கியது. அந்தத் தொடரில் கோப்பையையும் கைப்பற்றியது. வீரர்கள் அனைவரும் கோப்பையுடன் உற்சாகமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது, தோனி மிஸ்ஸிங். எங்கே என்று பார்த்தால், தனது மகளை தூக்கி கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தார். பிறகு என்ன, மொத்த அட்டன்ஷனும் இவர்கள் இருவர்மீதுதான்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தோனி தனது மகளுடன் உரையாடும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தோனி தனது மகள் ஸிவாவிடம், `எப்படி இருக்கீங்க’ என தமிழில் தொடங்கி பல்வேறு மொழிகளில் கேட்க, ஸிவா தனது மழலைப் பேச்சில், `நல்லா இருக்கேன்’ என அந்தந்த மொழியிலே பதிலளிக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆக்கிவருகிறார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

Powered by Blogger.