மதுவரி காரியாலயம் முன்பு போராட்டம்.!

கட்டட அனுமதியோ வியாபார உரிமமோ இன்றி, பாடசாலைக்கருகில், வணக்கத்தலங்களிற்கு அருகில், பருத்தித்துறை மக்களின் விருப்புக்கு மாறாக இயங்கிவரும் இம் மதுபானசாலையை இடமாற்றக்கோரி
கடந்த வருடம்,பருத்தித்துறை நகரசபை முன்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தி,தவிசாளருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

சபையில் இம் மதுபானசாலையை இடமாற்றுமாறு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
சபையின் அனைத்து உறுப்பினர்களும், பொது அமைப்புக்களும்,மக்களும் இக் கோரிக்கையை வலியுறுத்தி,4/10/2018 அன்று துறைமுகத்திலிருந்து பேரணியாகச் சென்று,பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

பின்பு,மீண்டும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் 27/12/2018 பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் செய்து மகஜரும் கையளிக்கப்பட்டது.இருந்தும், மதுவரி திணைக்களத்தினால் புதிய வருடத்திற்கான(2019) முதல் மூன்று மாதங்களிற்கெனக்கூறி (மார்ச் 31,2019 )வரை அனுமதி அளிக்கப்பட்டது. எனவே,இம் மதுபானசாலையை இடம் மாற்றும்வரை இனியும் தொடர்ந்து அனுமதி அளிக்கவேண்டாம்,என்பதை வலியுறுத்தி இன்றைய தினம் கொழும்பு மதுவரி திணைக்கள ஆணையாளர் காரியாலயம் முன்பாக கவயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் திரு.ப.சுரேஸ், திரு.சு.கோகுலகுமார் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.