மாமா வாங்கோ மாமா வாங்கோ !!

மாமா வாங்கோ மாமா வாங்கோ
மழலை பூக்கள் அழைக்கின்றோம்
செஞ்சோலை நிழல் தந்த மாமா வாங்கோ
இரத்த ஆற்றில் தினம் இங்கே மிதக்கின்றோம்

பாரத வரவு பெளர்ணமி என்றே
அப்பா அன்று சொன்னாரு
எங்களை விழுங்க வந்த சுனாமி என்றே
தலைவர் மாமா நீங்க சொன்னீங்க
காதகர் வந்தார் காமுக கழுகாய்
அம்மா கூட இரையாணாள்
சிங்கள ராணுவ கொடும்வதை முகாமில்
அப்பா சிதைந்து பிணமானார்

கண்ணை பறிச்சு காட்டில் விட்டு
கைத்தடி ஒண்டு தாறாங்க
கைத்தட்டு ஏந்தி பிச்சை கேட்க
வீதியில் எங்களை விட்டாங்க

கருநிலா காலம் கண் உறங்கி நாளாச்சு மாமா
சாகாமல் சாகிறோம் சவக்காட்டில் வீழ்கிறோம்
காத்திட ஓடி வாங்கோ
மழலை பூக்கள் வாடுகிறோம்
உங்கள் மதி முகம் காட்டி போங்கோ

-பாவலர் வல்வை சுயேன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.