களமிறங்கப்போகிறது ஹூண்டாய் QXi...டாடா,!!

மூன்று ஆண்டுகளுக்கு முன், கார்லினோ என்ற கான்செப்ட்டாக காட்சிக்கு வைக்கப்பட்ட ஹூண்டாயின் காம்பாக்ட் எஸ்யூவி, QXi என்ற பெயரில் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த காரின் டீசரை சமீபத்தில் வெளியிட்டுள்ளது ஹூண்டாய். QXi காம்பாக்ட் எஸ்யூவி-யில் என்னென்ன எதிர்பார்க்கலாம்...


தோற்றத்தில் க்ரெட்டாவின் நிழல் போல இருந்தாலும், QXi-ல் ஹூண்டாயின் புது டிசைன் கோட்பாடுகள் தெரிகிறது. டாடா ஹேரியர், கோனா மற்றும் புது சான்டஃபீ கார்களில் இருப்பதுபோல DRL மற்றும் ஹெட்லைட் தனித்தனியாக உள்ளன. காஸ்காடிங் க்ரில் டிசைன், Pull type கதவுகள், ரூஃப் ரெயில், டூயல்டோன் அலாய் வீல், LED டெயில் லைட் இருக்கின்றன. பில்லர்களின் வடிவம் மற்றும் ஜன்னல்கள் க்ரெட்டாவில் இருப்பதைப் போலவே இருக்கின்றன.

வழக்கமான ஹூண்டாய் கார்களைப் போல இதிலும் அதிகப்படியான வசதிகளை எதிர்பார்க்கலாம். டீசர் வீடியோவில் சன்ரூஃப் இருப்பது தெரிகிறது. ஆண்டிராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடன் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கும். நான்கு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் இருக்கலாம். XUV 300-ல் இருக்கும் வசதிகள் உட்பட, வென்டிலேட்டட் சீட் போன்ற சில செக்மென்ட் ஃபர்ஸ்ட் வசதிகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

 QXi மாடலில், 100bhp பவர் மற்றும் 172Nm டார்க் தரக்கூடிய 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், வெர்னாவில் இருக்கும் அதே 1.4 லிட்டர் 4 சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் என மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் வருகின்றன. முந்தைய ஹூண்டாய் பெட்ரோல் இன்ஜின்கள் போல இல்லாமல், டர்போ பெட்ரோல் இன்ஜின் செம பன்ச்சாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். டீசல் இன்ஜினில் வழக்கம்போல நல்ல மிட் ரேஞ்ச் டார்க் இருக்கும்.

1.4 லிட்டர் இன்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணியும், 1.0 லிட்டர் இன்ஜின் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் கூட்டணியும் வரப்போகிறது. செக்மென்ட்டில் டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் வரும் ஒரே கார் ஹூண்டாய் QXi.

ஏப்ரல் 17-ம் தேதி, நியூயார்க் இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோவில் இந்த கார் வெளியாகிறது. இந்தியாவில், ஜூலை மாதத்திற்கு முன்பே விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.7.5 லட்சம் முதல் 11 லட்சம் வரை விலை இருக்கும். விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு எக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா XUV 300 கார்களுக்கு கடும் போட்டி காத்திருக்கிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.