மொனாகோவில் மகத்தான வரவேற்பு பெற்ற சீன ஜனாதிபதி!!

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மொனாகோ நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் அவரது பாரியாருக்கு மொனாகோ மன்னர் இரண்டாம் பிலிப் மகத்தான வரவேற்பு அளித்துள்ளார்.


மொனாகோ மற்றும் சீனாவுக்கான அரசியல் உறவு 1995 ஆம் ஆண்டு முதல் காணப்படுகிறது. எனினும் சீன ஜனாதிபதி ஒருவர் மொனாகோவிற்கு விஜயம் செய்யும் முதல் தருணம் இதுவாகும்.

இந்த விஜயத்தின் மூலமாக இருநாடுகளுக்கும் இடையில் அரசியல், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளுடனான இராஜதந்திர உறவை மேம்படுத்தும் நோக்கில் சீன ஜனாதிபதி அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு சென்று பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.