குடும்பநல உத்தியோகத்தர்கள் கடமையை தட்டிக்கழித்தமையால் சிசு மரணம்!!(படங்கள்)

பொதுமக்களின் ஒவ்வொரு அடிப்படை சுகதாரத்தை  கவனிப்பதற்கே பெரும்பாலும் ஒவ்வொரு வலயம் அல்லது பிரதேச செயலகத்திற்கு உரித்தான வைத்தியதிகாரி(MOH) அலுவலகத்தின் கடமை.
இதில் உள்ள குடும்பநல உத்தியோகத்தர்கள் தமது தொழில் ஒரு வைத்தியசாலை உத்தியோகத்தர் அல்ல களப்பணியாளர் நேரடியாக ஓவ்வொரு வீடு வீடாக சென்று கர்ப்பணி தாய்மார் நிலை அறிந்து அவர்களை பற்றிய அறிக்கைகளை உடனடியாக தகவல்களை சேகரிப்பதும் கடமை பிள்ளை பிறப்பின் பின் தமது ஒதுக்கப்பட்ட ஊர் பகுதியில் வாழும் மாத ,நாட் கணக்கான சிசுக்களின் நிறை ,தாய்ப்பால் உள்ளெடுப்பது,தடுப்பு ஊசி போடுதல் போடாத குழந்தை வீட்டிற்கு நேரடியாக செல்லுதல் ,இரத்தத்தின் அளவு போன்றவற்றை பரிசோதித்து இதில் சாதாரணத்தை விட குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது குடும்ப நல உத்தியோகத்தர்கள் கடமையாகும் .

இதை கூட ஒழுங்குமுறையாக தமது கடமைகளை பேணாததால் ஒரு சிசு மரணம் சித்தாண்டி கிராமத்தில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் தாயை பொருத்தவரை வறுமையான குடும்பம் இதைவிட மனநோயாளி இப்படியான தாய்மாரில் அந்த பகுதிக்குரிய குடும்பநல உத்தியோகத்தர் விசேட கவனிப்பு வைத்து கொள்ளுவது முக்கிய அம்சமாகும் .ஆனால் இதில் துளி கூட சேவை மனப்பான்மையை ஈடுபடாததால் ஒரு சிசு மரணத்திற்கு தாயை குற்றம் சாட்டுவதா????இதற்கென்று நியமிக்கப்பட்ட குடும்பநல உத்தியோகத்தர் தவறான அனுகுமுறையா????

இவ் சிசு இறப்பு  பற்றி எமது நேரடி மேலதிக தகவல்!?!!

#ஏறாவூர் #பொலிஸ் #பிரிவு, #சித்தாண்டி -01 #யில் 09 #மாத #ஆண் #குழந்தை #பரிதாப #மரணம்.

06-06-2018 அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  சுகப்பிரசவமாக  பிறந்த இக்குழந்தை, போஷாக்கு குறைவு காரணமாக மூன்று நாட்கள் PPU வில் வைக்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் 09/06/2018 அன்று வீடு வந்துள்ளனர்.

மீண்டும் 10/06/2018 யில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு குழந்தையுடன் வந்த தாயிடம், குழந்தைக்கு எவ்வாறு தாய்ப்பால் கொடுக்க வேடுமென விளக்கமாக கூறி அனுப்பிவைத்துள்ளனர்.

மறுநாள் 11/06/2018 அன்று இக் குழந்தையை பார்வையிட சமூகமளித்த. MIDWIFE, நேற்று  குழந்தை மரணிக்கும் வரையிலான ஒன்பது மாத காலத்துக்குள் ஒரு தடவையேனும்  எங்கள் வீட்டுக்கு வரவில்லை என பெற்றோர் தெரிவித்தனர்.

ஆனாலும் இக் குழந்தையின் பெற்றோரின் வறுமை நிலையினாலும், உதவிக்கு யாருமில்லாததினாலும் குழந்தையை ஒன்பது மாதகாலமாக கிளினிக் எதற்குமே பெற்றோர் அழைத்துச் செல்லவில்லை.

இதனால் உடல் நிறை, வளர்ச்சி எதுவுமே தெரியாத நிலையில் பெற்றோர் இருந்தாலும்,

ஏன்?இக் குழந்தையை  கிளினிக் அழைத்துவராமல்  இருகிறார்கள் என கேட்க MIDWIFE (குடும்பநல உத்தியோகத்தர்)கூட போகவில்லை

இதற்கிடையே குழந்தையின் தாய்க்கு மனநோய் ஏற்பட்டதால், தாய்ப்பால் கொடுக்க முடியாமல் லக்டொஜன் பால் மாவையே கொடுத்து வந்துள்ளனர்.

ஒன்பது மாதமாக குழந்தைக்கு தடுப்பூசி கூட போட முடியாமலிருந்த தாய், , நேற்று 23/03 அன்று காலை செங்கலடி MOH அலுவலகத்துக்கு சென்று குழந்தைக்கு இரரண்டாம் மாதத்தில் போடவேண்டிய தடுப்பூசியை ஒன்பதாம் மாதத்தில் போட்டுக்கொண்டு வீடு வந்துள்ளார்.

சுகதேகியாக இருந்த குழந்தைக்கு நேற்று 24/03 அதிகாலை 02,30 மணியளவில்  திடீரென வாந்தியுடன்  வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு சிறிது நேரத்தில் மரணித்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது

No comments

Powered by Blogger.