ஆசிட் வீச்சிலிருந்து மீண்ட லஷ்மி அகர்வால் பயோபிக் - பாராட்டைப் பெறும் தீபிகா படுகோனின் தோற்றம்!!

காதலை ஏற்க மறுத்த ஒரே காரணத்துக்காகத் தனது 15 வயதிலேயே ஆசிட் வீச்சு என்ற கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டவர்தான் லஷ்மி அகர்வால்.
2005-ம் ஆண்டு, தலைநகர் டெல்லியில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. ஆசிட் வீச்சுக்குப் பின்னால் சிதைந்த முகத்துடன் காணப்படுகிறார் லஷ்மி. இதனால், அவர் பல இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டார். எங்கு சென்றாலும் அவரை வெறுக்க ஆரம்பித்தனர். இருப்பினும் மனம் தளராமல், 'நான் மட்டும் அல்ல...
லஷ்மி அகர்வால்
என்னைப்போல ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் குரல்கொடுக்க வேண்டும். இனி, இந்தக் கொடுமைகள் யாருக்கும் நிகழாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும்’ எனக் கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆசிட் விற்பனை ஒழுங்குமுறைக்குள் கொண்டுவந்தார். தொடர்ந்து `சான்வ் ஃபவுண்டேஷன்' என்ற தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கி ஆசிட் வீச்சுக்கு எதிராகவும் ஆசிட் வீச்சால் பாதிக்கட்டவர்களுக்குப் பெரிதளவில் உதவி செய்தும் வருகிறார். அதற்காக அவர் சர்வதேச அளவில் விருதுகள் பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது. சமீபத்தில்  இந்தியில் ஹிட் அடித்த `ராஸி' படத்தை இயக்கிய மேக்னா குல்சார்தான் லஷ்மியின் பயோபிக்கையும் இயக்கவிருக்கிறார்.`சபாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் லஷ்மி கேரக்டரில் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், லஷ்மியின் உருவத்தை நினைவுபடுத்துவது போல், திபீகா ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டது போன்று தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். இந்த ஃப்ர்ஸ்ட் லுக் தற்போது வைரலாகி வருகிறது. பலரும் தீபிகாவின் தோற்றத்துக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.