போரியல் சாதனை என்று வர்ணிக்கப்படும் விடுதலைப் புலிகள் தரையிறங்கிய நாள் !!

'ஓயாத அலைகள் 03' என்ற குறியீட்டு பெயருடன் இந்த நூற்றாண்டின்  போரியல் சாதனை என்று வர்ணிக்கப்படும் குடாரப்பில் புலிகள் தரையிறங்கிய நாள் .(26 மார்ச் 2000)

இந்த நாளுக்கு சரியாக பத்து நாட்களுக்கு முன்பு ஆனையிறவு படைத்தளத்திற்கு வருகை தந்த அமெரிக்க படைத்துறை தளபதிகள் உலகில் யாராலும் இதன் பாதுகாப்பை மீறி உள் நுழைய முடியாது என்று சான்றிதழ் வழங்கிவிட்டு சென்றிருந்தார்கள்.

ஆனால் நடந்ததோ வேறு.

அதன் பின் வந்த 34 நாட்கள் நேரடியாக 40000 படையினருடனும் மறைமுகமாக உலக வல்லரசுகளின் படைத்துறை தொழில்நுட்ப வளங்களுடனும் / இராணுவ மூளைகளுடனும் வெறும் 1200 போராளிகளையும் தனது முதன்மை தளபதியையும் வைத்து சண்டையிட்டு அவர்களை தலைவர் பிரபாகரன் மண்டியிட வைத்த நாட்கள்.

புலிகளை என்றுமே சண்டையிட்டு அழிக்க முடியாது என்பதை உலகம் புரிந்து கொண்ட நாட்கள் அவை.

மறுவளமாக உலகளாவிய அளவில்  பின்கதவு சூழ்ச்சி, சதி, துரோகங்களின் வழியே புலிகளை அழிக்க காய் நகர்த்தல்கள் தொடங்கிய காலப் பகுதியும் அதுதான்.

சரியாகச் சொன்னால்  தமிழின அழிப்பின் மூலம் தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிப்பதென்று பிராந்திய/ மேற்குலக அரசுகள் முடிவெடுக்கக் காரணமான புலிகளின் போரியல் சாதனை இது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.