காலியில் இலஞ்சம் பெற்ற அதிகாரி பணி நீக்கம்…!!

காலியிலுள்ள தேசிய பாடசாலையொன்றுக்கு மாணவி ஒருவரை இணைத்துக்கொள்ள இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவி ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டமையை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் பலனாகவே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கல்வி கட்டமைப்பை இலஞ்சம் மற்றும் ஊழல்கள் அற்றதாக மாற்றுவதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தகவல்களை பெறும் முறைமையின் ஊடாகவே இந்த தகவல் கிடைக்கபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பெற்றோர்கள் ஏமாற்றப்பட்டமை, ஆசிரியர் இடமாற்றங்களின் போதான முறைகேடுகள் தொடர்பில் கல்வி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை குற்றவியல் விசாரணை திணைக்களம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.