வடமாகாண தைக்வொண்டோ போட்டியில் முல்லைத்தீவு சாதனை!!

வட மாகாண ரீதியான அனைத்து மாவட்டங்களுக்கிடையே நடை பெற்ற ஆண்கள் பெண்களுக்கான தைக்வொண்டோ போட்டியில் ஆண்கள் பெண்கள் இரு பிரிவிலும் முல்லைத்தீவு மாவட்டம் மாகாண ரீதியாக முதல் இடத்தைப் பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாகாண மட்ட ஆண், பெண் தைக் வொண்டோ போட்டியில் ஆண்கள் பிரிவில், முல்லைத்தீவு மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்று 3 தங்கம் 3  வெள்ளி 3 வெண்கலம் பெற்றுக்கொண்டதுடன், மன்னார் மாவட்டம் 2 தங்கம் 2 வெள்ளி 3 வெண்கலம் பெற்றுக் கொண்டது.
மூன்றாம் இடத்தினை கிளிநொச்சி மாவட்டம் பெற்று 2 தங்கம் 2 வெள்ளி 2 வெண்கலப் பதக்கத்தைப் பெற்று   கொண்டது.
பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை முல்லைத்தீவு மாவட்டம் தனதாக்கி 3 தங்கம் 2வெள்ளி 2வெண்கலம் பெற்றுக்கொண்டதுடன் மன்னார் மாவட்டம்  2 தங்கம் 2 வெள்ளி 1 வெண்கலம் பெற்றுக் கொண்டது.
மூன்றாம் இடத்தினை வவுனியா மாவட்டம் 1தங்கம் 1 வெள்ளி  1 வெண்கலப் பதக்கத்தைப் பெற்று    கொண்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.