இலங்கை கடற்படை போர்க்கப்பல் பயிற்சிக்கு சீனா பயணம்!!

இலங்கை கடற்படைக்கு சீனா வழங்கவுள்ள போர்க்கப்பலில் பணியாற்றுவது குறித்து சிறப்பு பயிற்சிகளை பெறுவதற்காக 110 கடற்படையினரை சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த கடற்படையினரை இம்மாத இறுதிக்குள் சீனாவுக்கு அனுப்பவுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த  போர்க்கப்பல் இவ்வாண்டு இறுதிக்குள் கொண்டுவரப்படுமெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படையில், 2015ஆம் ஆண்டு வரை Tongling என்ற பெயரில் இணைத்துக் கொள்ளப்பட்ட Jangweil வகையைச் சேர்ந்த ஏவுகணைப் போர்க்கப்பலே இலங்கை கடற்படைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.