நாளை மறுதினம் வெளியாகின்றது O/L பரீட்சை பெறுபேறுகள்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


நாளை மறுதினம்(வியாழக்கிழமை) பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித இதனைத் தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகள் அடங்கிய அட்டவணையைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் நான்கு இலட்சத்து 22 ஆயிரத்து 850 பாடசாலை பரீட்சாத்திகளும்,இரண்டு இலட்சத்து 33 ஆயிரத்து 791 தனியார் பரீட்சாத்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.