கிழக்கில் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கிவைப்பு!!

கிழக்கு மாகாணத்தில் கால்நடை அபிவிருத்தி போதானாசிரியர்களுக்கான நியமனங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற 12 கால்நடை அபிவிருத்தி போதானாசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
விவசாயத் திணைக்களத்தின் செயலாளர் கே.சிவனாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று கால்நடை அபிவிருத்தி போதானாசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கிவைத்தார்.
வைபவத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபய குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் செயலாளர் அசங்க அபயவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக செயலாளர் யு.எல்.எம்.அசீஸ், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் உள்ளிட்ட விவசாய அமைச்சு மற்றும் விவசாய திணைக்களத்தின் உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

Powered by Blogger.