உடல் எடை குறித்த விமர்சனம்: சோனாக்‌ஷி பதில்!

சமூக வலைதளங்களில் நடிகைகள் தங்கள் உடலமைப்பு குறித்து தொடர்ந்து மோசமாக விமர்சிக்கப்படுகின்றனர். சில நடிகைகள் இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கின்றனர். சிலர் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றனர். தற்போது நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். அப்ராஸ் கான் சினிமா பிரபலங்களை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சி க்யூ ப்ளே என்ற யூடியூப் சேனலில் வெளியாகிறது. கரண் ஜோஹர், கரீனா கபூர் ஆகியோரை தொடர்ந்து சோனாக்‌ஷி சின்ஹாவை நேர்காணல் செய்த நிகழ்ச்சி இ
நேற்று (மார்ச் 26) வெளியானது. இதில் சோனாக்‌ஷி தன் மீதுவைக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். தன் பதின்ம வயதுகளில் மிகவும் உடல் எடை அதிகரித்து காணப்பட்டதாக தெரிவித்த சோனாக்‌ஷி பாலிவுட்டில் தான் கதாநாயகியாக அறிமுகமான முதல் படத்திற்காக 30 கிலோ எடையை குறைத்ததாக கூறினார். “உங்களுக்குப் பிடித்தால் என்னைப் பாருங்கள். பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். விமர்சனங்கள் என்னை மெருகேற்ற உதவுகின்றன. அவற்றை மகிழ்ச்சியுடன் படிக்கிறேன். ஆனால், வீட்டில் சண்டை போட்டு வந்த கோபத்தில் என் மீது விமர்சனங்களை முன்வைத்தாலோ, என்னை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று விமர்சனங்களை வைத்தாலோ ஏற்றுக்கொள்ள மாட்டேன். உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் பின் ஏன் அவரை சமூக வலைதளங்களில் பின் தொடர வேண்டும், கருத்துகளைப் பதிவிட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.