ரணிலுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் மஹிந்த அணி!!

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கோப்குழு, மற்றும் கணக்காளர் நாயகத்தின் அறிக்கையினை முழுமையான முறையாக செயற்படுத்தினால் மோசடிக்காரர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இம்மோசடியில் நேரடியாக தொடர்புபட்டுள்ளார்கள்’ எனவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.