அம்மா பாட்டு - மலேசியாவில் வெளியீடு - வித்யாசாகர்!!

24.02.2019 திகதியன்று மலேசியாவில் நடந்த உலக திருக்குறள் மாநாட்டு விழாவின் இரண்டாம் நாளன்று  கவிஞர் மற்றும் எழுத்தாளர் திரு. வித்யாசாகர் அவர்கள் எழுதிய “வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்” எனும் கட்டுரைத் தொகுப்பு புத்தகமும், அம்மா பற்றிய நினைவுப் பாடல் ஒன்றின் குறுந்தடும் ஒருங்கே மேடையில் அவருடைய தாயார் கரங்களால் வெளியிட உலகறிந்த இதயநல மருத்துவர் திரு. சொக்கலிங்கம், தமிழ்திரு வா.வு.சி பெயரன் திரு. முத்துக்குமார சுவாமி, வகுப்பறை பதிப்பகதின் நிறுவனர் திரு. பரிதி, மலேசிய அரசு பள்ளிக்கூடத்தின் ஆசிரியை திருமதி. உமா கணேசன் மற்றும் தமிழ்த்தாய் அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் பேரன்பின் சகோதரர் திரு. உடையார் கோயில் குணா அவர்களும் பொருளாளர் சிவகாமி குணா அவர்களும் உடனிருந்து புத்தக பிரதிகளையும் அம்மா பாடலின் குறுந்தகட்டையும் பெற்றுக்கொண்டனர்.
அரங்கம் கரவோசையினாலும் அம்மாப் பாடலின் உருக்கத்தாலும் மெய்மறந்து பாராட்டி தமிழரின் உயர்பண்பு மாறாமல் கௌரவித்து மகிழ்ந்தது. இஃதன்றி, இன்னும் பல ஆய்வரங்கங்கள், புத்தக வெளியீடுகள், வாழ்த்துரைகள், விடுதலைப் பேச்சு, பல்சுவை நிகழ்வுகளென  விடுதலை உணர்வும் சமூக சிந்தனைகளும் இலக்கிய பேராளுமையுமாக இம்மாநாடு மிகச் சிறப்புற்று விளங்கியது.
மொத்தம் மூன்று நாட்களாக நடந்த உலக திருக்குறள் மாநாட்டின் பல்வேறு நிகழ்வுகளில் மேலே கூறியவர்களோடு சேர்ந்து  மதிப்பிற்குரிய தொழிலாலதிபர் திரு. விஜி சந்தோசம், பேராசிரியர் திரு. மறைமலை இலக்குவனார், தஞ்சை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு. பாஸ்கர், தில்லி தமிழ்ச்சங்க தலைவர் திரு. பெரியண்ணன், சி.கே.பொறியியல் கல்லூரி அறங்காவலர் முனைவர் திரு. சி.கே. அசோக்குமார், தொழில் முனைவர் திரு. செந்தூர் பாரி, சிங்கையிலிருந்து பேராசிரியர் திரு. அழகேசன், ஆஸ்திரியாவிலிருந்து கவிஞர் திரு. ஜெயராம் சர்மா, தொழில் முனைவர் திரு. விஸ்வநாதன் கோவிந்தன், உதயசூரியன் தமிழேட்டின் ஆசிரியர், மலேசியாவிலிருந்து பேராசிரியர் திரு. மன்னர்மன்னன் மருதை, கவிஞர் திரு. முல்லை செல்வன், மலேசியா எழுத்தாளர் சங்க தலைவர் பெ. ராஜேந்திரன், எழுத்தாளர் திரு. முருகன் கண்ணன், ஹைத்ரபாத் தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் திரு. நடராசன் கணபதி, சாதனைச்செல்வி ஓவியா, திருக்குறள் அன்வர் பாஷா,  பதிப்பாளர் திரு. பரிதி மற்றும் பிரான்ஸ், சிங்கப்பூர், இலங்கை, குவைத், இந்தியா என இன்னும் பல நாடுகளிலிருந்து பல தமிழ்ச்சங்கங்களின் ஆளுமைகளும் பல கல்லூரிகளின் பேராசிரியர்கள் முனைவர்களும் கலந்துகொண்டு இம்மூன்று நாடுகள் மாநாட்டு விழாவை பெரியளவில் சிறப்பித்தனர்.
--
வித்யாசாகர்
மாதவரம், சென்னை
வாட்சப் செய்ய - 09840502376
பேச - +965 97604989
--
வித்யாசாகர்
மாதவரம், சென்னை
வாட்சப் செய்ய - 09840502376
பேச - +965 97604989
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.