தலைமன்னார் - தனுஷ்கோடி கடலில் 30 கி.மீ. நீந்தி 10 வயது மாணவர் சாதனை!!

இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி இடையிலான 30 கிலோ மீட்டர் கடல் தொலைவை 10.30 மணி நேரத்தில் நீந்திக் கடந்து 10 வயது மாணவர் உலக சாதனை படைத்தார்.

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி மற்றும் இலங்கை தலைமன்னாருக்கு இடையே உள்ள 30 கிலோ மீட்டர் பாக் நீரினை தூரத்தை கடந்த 1994-ஆம் ஆண்டு
குற்றாலீஸ்வரன் நீந்திக் கடந்து சாதனை படைத்தார். இந்த சாதனையைத் தொடர்ந்து இதுவரையில் 9 பேர் அதே பகுதியை நீந்தி கடந்தனர்.
இந்நிலையில், தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் ஜெய் ஜஸ்வந்த் (10) . இவர் தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே
பயிற்சியாளர் விஜயகுமார் மூலம் நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார். இந்த மாணவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் 8 வயதில் பங்கேற்று 81 நிமிடம் தொடர்ந்து நீந்தி உலக சாதனை படைத்தார். மேலும் இந்திய அளவிலான தேசிய ஓப்பன் வாட்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
இந்நிலையில், தலைமன்னார்- தனுஷ்கோடி இடையே 30 கிலோ மீட்டர் கடல் தூரத்தை நீந்தி கடக்க திட்டமிட்ட ஜெய் ஜஸ்வந்த் திங்கள்கிழமை ராமேசுவரம் வந்தார். இதையடுத்து , புதன்கிழமை பிற்பகல் பயிற்சியாளர் விஜயகுமார் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்குச் சென்றார்.
இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தலைமன்னார் ஊட்மலை பகுதியில் இருந்து ஜெய் ஜஸ்வந்த் நீந்தத் தொடங்கினார். தொடர்ந்து 10.30 மணி நேரம் நீந்தி தனுஷ்கோடியை வந்தடைந்தார். கடல் நீச்சலில் உலக சாதனை படைத்த ஜெய் ஜஸ்வந்தை , ரயில்வே பாதுகாப்புபடை டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் பெற்
றோர்கள் ரவிக்குமார், தாரணி , கடற்படை அதிகாரிகள்,பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர். தலைமன்னார்- தனுஷ்கோடி கடல் பகுதியை 10.30 மணி நேரத்தில் 10 வயதில் நீந்தி வந்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.