குடிநீர் பிரச்னை,குளங்கள்,50 லட்சம் பேருக்கு 5ஆண்டுகளில் வேலை வாய்ப்பைத் தர முடியும்-கமல்ஹாசன்!!

ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், நல்லது செய்து காட்டுகிறோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
தென்சென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ரங்கராஜன் போட்டியிடுகிறார்.


அசாம் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் பணியில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டு, தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து

செம்மஞ்சேரியில் வியாழக்கிழமை கமல் பேசியது:
ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். அதை கேலி செய்கின்றனர். 40 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, எங்களை கேலி செய்கின்றனர். மக்களுக்குத் தண்ணீர் கிடைக்கச் செய்வது மட்டுமல்ல, பலருக்கு வேலைகளும் கிடைக்கச் செய்வோம். ஒரு நல்லது நடக்கும்போது, அதன் சுழற்சியாக மற்ற நல்லதுகளும் நடக்கும்.

இப்போது திருடுவதை சிலர் நிறுத்தினாலே போதும். இரண்டு தமிழகத்தை மேம்படுத்துவதற்கான பணம் கிடைக்கும். திட்டங்கள் எல்லாம் வகுத்துக் கொடுக்க அறிவார்ந்த தமிழர்கள் காத்திருக்கின்றனர். அவர்களை யாரும் கேட்கவில்லை. திட்டங்களுடன் தொழில் முனைவோர் வரும்போது, எங்களுக்கு எவ்வளவு தருவீர்கள் என்றுதான் கேட்டனர். மக்கள் நீதி மய்யம் அப்படி இருக்காது.

தொழில் முதலீடு செய்ய வருபவர்களிடம் அவர்களுக்கு என்ன வேண்டும் என்றுதான் கேட்போம். அவர்கள் இங்கு வந்தால் நமக்கு வேலை கிடைக்கும். செய்வோம், செய்வோம் என்று பலர் மக்களை ஏமாற்றியுள்ளனர். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். நல்லது செய்துகாட்டுவோம் என்றார்.

கண்ணகி நகரில் கமல் பேசியது:
மக்களின் வாழ்வாதாரத்தை எப்படி முன்னேற்ற வேண்டும் என்பதை யோசித்து வைத்திருக்கிறோம். வேலைவாய்ப்பையும் அளிப்போம். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் பலர் உள்ளனர். அப்பா, தாத்தா அந்தக் கட்சிக்குப் போட்டனர். அதனால், நாமும் அந்தக் கட்சிக்குப் போடுவோம் என்று போடாதீர்கள். யோசியுங்கள். நாட்டின் நலன் கருதி வாக்களியுங்கள் என்றார்.

பிரசாரத்தின்போது உடன் வந்த வேட்பாளர் ரங்கராஜனையும் கமல் பேச வைத்தார். ரங்கராஜன் பேசியது:
குடிநீர் பிரச்னை உள்ளது. அதை எங்களால் தீர்க்க முடியும். நீர்நிலைகளைத் தூர்வாருவதுடன், அரசு புறம்போக்கு நிலங்களில் குளங்கள் அமைப்போம். இந்தத் திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேருக்கு 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பைத் தர முடியும் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.