பெங்களூரு பந்து வீச்சை தேர்வு செய்தது!!
12 ஆவது ஐ.பி.எல். தொடரின் ஏழாவது போட்டி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக் குழாமில் டீகொக், சூரிய குமார் யாதவ், யுவராஜ் சிங், கிரன் பொலார்ட், ஹர்த்தீக் பாண்டியா, குருனல் பாண்டியா, பென் கட்டிங், மிட்செல் மெக்லெனகான், ரஸ்ஸி சலாம், பும்ரா மற்றும் மலிங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர் பெங்களூரு அணிக் குழாமில் பார்தீவ் படேல், மொயின் அலி, வில்லியர்ஸ், சிம்ரன் ஹெட்மெயர், சிவம் டூப், கிரேணட்ஹோம், நவடிப் சைனி, சாஹல், உமேஷ் யாதவ் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இவ்விரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 14 போட்டிகளிலும், பெங்களூரு அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன் பெங்களூரில் இவ் விரு அணிகளும் ஒன்றையொன்று எதிர்கொண்ட போட்டியில் பெங்களூர் அணி 2 போட்டிகளிலும், மும்பை அணி 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை