யாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்தாராம் வடக்கு ஆளுநர்!!


யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின்  ஞானப்பிரகாசம் ஆண்டகையை  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  யாழ் ஆயர் இல்லத்தில் இன்று (28) முற்பகல் சந்தித்தார்.

யாழ்  மறைமாவட்ட   மற்றும் வடமாகாணத்தில் உள்ள கத்தோலிக்க சமயத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , மத ரீதியான பிரச்சனைகளை எவ்வாறு தீர்வுக்கு கொண்டுவரமுடியும் என்பது தொடர்பாக இருவருக்குமிடையிலான இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்களில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள கத்தோலிக்க ஆலயங்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட எஞ்சியுள்ள மக்களின் விடுவிக்கப்படாத காணிகளை   விடுவிக்கும் நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு யாழ் மறைமாவட்ட ஆயர்  ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பின் போது வடமாகாண பௌத்த மாநாட்டிற்கு தன்னுடைய ஆசியை வழங்கியதுடன் ஆளுநர் தமது பணிகளை திறம்பட மேற்கொண்டு செல்வதாக யாழ் மறைமாவட்ட ஆயர் ஆளுநருக்கு ஆசி வழங்கினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.