தேர்தலை நடத்தவேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்கு இல்லை!

மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்கு இல்லை. அதனால் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் மாகாணசபைகள் தேவையில்லை என்று தீர்மானித்து, அவற்றை ஆளுநர்களின் அதிகாரத்துக்கு கீழ் கொண்டுவரும் அபாயம் இருக்கின்றது.
 இவ்வாறான நிலை ஏற்பட்டால் யாரும் கவலைப்பட்டு பிரயோசனம் இல்லாமல் போகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மாகாணசபை தேர்தல் எந்த அறிவிப்பும் இல்லாமல் பிற்படுத்தப்பட்டு ஒன்றரை வருடமாகின்றது.எப்போது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.
ஜனாதிபதிக்கும் தெரியாது,பிரதமருக்கும் தெரியாது.விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கும் தெரியாது.9மாகாணசபைகளில் 6மாகாணங்களின் ஆட்சிக்காலம் முடிவடைந்துள்ளது. மேல்மாகாணசபை காலம் இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.