நிறவெறி பிரச்சாரத்துக்கு இங்கு இடமில்லை: பேஸ்புக்!

நியூஸிலாந்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, நிறவெறியர்கள்நடத்தும் வெள்ளை தேசியவாத பேச்சுக்களையும், நிறவெறி கொண்டபிரிவினைவாத பதிவுகளையும், பிரச்சாரங்களையும்தடை செய்ய பேஸ்புக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.


உலகின் மிக பிரபலமான சமூக வலைத்தளமான பேஸ்புக்கை சுமார் 100 கோடிக்கும் மேலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இனவெறி, நிறவெறிபதிவுகள் தடை செய்யப்பட்டு வந்தாலும்,சமீப காலங்களில் அவை வேறு விதமாக பரவி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது தான் சமீபத்தில் நியூஸிலாந்தில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்.

இந்த தாக்குதலில்,வெள்ளையர்களுக்கு தனி தேசம் வேண்டும் என்று பிரச்சரம் செய்யும் அமைப்பை சேர்ந்த ஒருவர், இரண்டு மசூதிகளுக்குள் சென்று, அங்குள்ள இஸ்லாமியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதை பேஸ்புக்கில் நேரலையில் அவர் ஒளிபரப்பும் செய்தார். இந்த வீடியோவை பேஸ்புக் நிறுவனம் கண்டறிந்து தடை செய்வதற்குள் 4000க்கும் மேற்ப்பட்டோர் அதை பார்த்தனர்.

இந்த நிலையில், வெள்ளை தேசியவாத பிரச்சாரம் செய்யும் அமைப்புகள் மற்றும் இனவெறி பிடித்தவர்களின் பிரிவினைவாத பதிவுகளிளைபேஸ்புக் தடை செய்யாமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், இனி வெள்ளை தேசியவாதம், பிரிவினைவாத பேச்சுக்களை பேஸ்புக் தடை செய்யும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. "இதுபோன்ற பதிவுகளுக்கும்,நிறவெறி பிடித்த அமைப்புகள் மற்றும் வெறுப்புணர்வு பரப்புபவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளதால், அவற்றுக்கு பேஸ்புக்கில் இனி இடம் கிடையாது" என்று அந்நிறுவனம் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.