ஜெயலலிதா மரணம்.!!குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்-ஸ்டாலின்!!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் சிறையிலடைக்கப்படுவார்கள் என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.


மதுரை மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து வியாழக்கிழமை மதுரையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியது:

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார். அதற்கு போதிய நிதி ஒதுக்கவேண்டும். ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. மதுரை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். ஆனால், தற்போது வரை அந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தார். படித்த பட்டதாரிகளை பக்கோடா விற்க சொல்லும் மோடியால் எப்படி வேலை வழங்க முடியும். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 6.01 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். ஆனால், பொள்ளாச்சியில் ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது.

மக்களவைத் தேர்தலில் வெற்ற பெற்றால் 25 கோடி பேருக்கு மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாக ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளார். அந்தத் திட்டத்தை திமுக வரவேற்கிறது.
தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அவர் முதல்வராக இருந்தபோதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிலிருந்து அவரது மரணம் வரை அனைத்தும் மறைக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றார்.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மு.க. ஸ்டாலினுடன், ப.சிதம்பரம் சந்திப்பு: பிரசார மேடைக்கு மு.க. ஸ்டாலின் வருவதற்கு முன்பாகவே மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வந்து அமர்ந்திருந்தார். மு.க. ஸ்டாலின் மேடைக்கு வந்தவுடன் அவரைச் சந்தித்து பேசிய ப.சிதம்பரம் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.