இந்திய கம்யூனிஸ்ட் தேசியத் தலைவர்கள் பிரசாரம்!!

மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேசியத் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி ஏப்ரல் 7-இல் திருப்பூரிலும், ஏப்ரல் 8-இல் கோவையிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.


தேசிய செயலாளர் டி.ராஜா ஏப்ரல் 9-இல் சென்னையிலும், ஏப்ரல் 10-இல் விழுப்புரம் மற்றும் சிதம்பரத்திலும், ஏப்ரல் 11-இல் நாகப்பட்டினத்திலும், ஏப்ரல் 12-இல் திருவாரூரிலும், ஏப்ரல் 13-இல் தூத்துக்குடியிலும் ஏப்ரல் 14-இல் கரூர் மற்றும் ஈரோட்டிலும், ஏப்ரல் 15-இல் திருப்பூரிலும், ஏப்ரல் 16-இல் கோவையிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

தேசியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு ஏப்ரல் 10-இல் விழுப்புரத்திலும், ஏப்ரல் 11-இல் சிதம்பரத்திலும், ஏப்ரல் 12-இல் நாகப்பட்டினத்திலும், ஏப்ரல் 13-இல் மதுரையிலும், ஏப்ரல் 14-இல் தூத்துக்குடியிலும், ஏப்ரல் 15-இல் திருப்பூரிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.