மசூத் அஸார்-சர்வதேச பயங்கரவாதி-ஐ.நாவில் அமெரிக்கா!!

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் வரைவு தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளிடம் அமெரிக்கா வழங்கியுள்ளது.


பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல்-காய்தா தடை ஆலோசனைக் குழுவில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பாகிஸ்தானின் கூட்டாளியான சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இந்நிலையில், மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் வரைவு தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளிடம் செவ்வாய்க்கிழமை அமெரிக்கா நேரடியாக வழங்கியது. இந்த வரைவு தீர்மானத்துக்கு பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த வரைவு தீர்மானத்தில், மசூத் அஸாருக்கு ஐ.எஸ். மற்றும் அல்-காய்தா பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளது. அந்த அமைப்புகளுக்கு நிதியுதவியும், ஆயுதங்களையும் அவர் வழங்கி உள்ளார்.


அவர் தலைமையிலான ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு, பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு தீர்மானம் குறித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், வரைவு தீர்மானத்தின் மீது அதிகாரப்பூர்வமற்ற வகையில் விவாதம் நடத்தப்படும். இந்த விவாதத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டால், பின்னர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பாகத் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்றனர்.

சட்டவிதிகளை மீறியுள்ளது: அமெரிக்காவின் இந்த வரைவு தீர்மானம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் கூறியதாவது: 

மசூத் அஸாருக்கு எதிரான வரைவு தீர்மானத்தை அமெரிக்கா வலுக்கட்டாயமாகத் தாக்கல் செய்துள்ளது. தடை ஆலோசனைக் குழுவை மீறி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானத்தை நேரடியாகத் தாக்கல் செய்துள்ளது.

இதன் மூலம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சட்டவிதிகளை அமெரிக்கா மீறியுள்ளது. இந்த விவகாரத்தில் விரிவான தீர்வு காண, சீனாவுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்துக்குத் தடை ஏற்படுத்தினோம் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.