பிரதேசசபை உறுப்பினரால் பெறப்பட்ட 30000 ரூபா இலஞ்சம்!!

வலிகாமம்வடக்குபிரதேசசபையில் சிங்கள கட்சி உறுப்பினர் ஒருவர் 30000 ரூபா இலஞ்சம் பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கீரிமலை சீராவளை சவாரி திடல் வலி வடக்கு பிரதேச சபையின் கீழே உள்ளது, குறித்த சவாரி திடலில் அதிகளவான மாட்டு வண்டி சவாரி போட்டிகள் இடம்பெற்றுவருகின்றன சவாரி போட்டிகள் நடக்கும் தினத்தில் ஐஸ் கிறீம் வியாபாரம் செய்வதற்கு 30000 ரூபா பணம் பெறப்பட்டுள்ளதுடன் எந்தவித பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை.

குறித்த உரிமையாளர் 30000 பணம் செலுத்தியதன் காரணமாக 6 போட்டிகளுக்கு வியாபாரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏனைய ஐஸ் கிறீம் வாகனங்கள் அன்றைய தினம் போட்டி நடைபெறும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. வலி வடக்கு பிரதேச சபை தவிசாளரே , உறுப்பினர்கள்களே இது உங்களின் கவனத்திற்கு..

No comments

Powered by Blogger.